தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுக் குடிநீர் திட்டப்பணி விரைவில் தொடரும் - வேலுமணி - assemply

சென்னை: ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கூடுதல் பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

வேலுமணி

By

Published : Jul 16, 2019, 5:36 PM IST

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் பெரியகருப்பன், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, தமிழ்நாட்டில் பல்வேறு குடிநீர் திட்டங்களில் உரிய பராமரிப்பு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலும் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details