தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்! #LiveUpdates - Assembly

assembly

By

Published : Jul 18, 2019, 10:29 AM IST

Updated : Jul 18, 2019, 9:13 PM IST

19:34 July 18

சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்! #LiveUpdates

7:50 PM

கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் அத்தி வரதர் தரிசனத்தை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள்.

7:48 PM

அத்திவரதர் கோயில் நெரிசலில் இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

7:40 PM

அத்திவரதர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் மாலை 6 மணி நேரப்படி 1.2 லட்ச பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

7:38 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதர் கோயிலில் தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து பதில்...

7:30 PM

டிக் டாக் செயலி தடை தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

7:29 PM

டிக் டாக் செயலி தமிழ்நாட்டில் உறுதியாக தடை செய்யப்படும் - அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் தகவல்

19:00 July 18

அத்திவரதர் கோயில் பற்றி கேள்வி எழுப்பிய ஸ்டாலின்?

6:27 PM

இது குறித்து முழு விவரம் வந்தவுடன் அவையில் பதில் அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

6:26 PM

அத்திவரதர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிதி வழங்கப்படுமா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

6:25 PM

இன்று நான்கு பேர் இறந்துள்ளனர். சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். எனவே தேவையான வசதியை அரசு செய்து தர வேண்டும். மேலும் உயிரிழந்த மக்களுக்கு உதவித்தொகை தரப்படுமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

6:24 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொடர்ந்து வருகின்றனர். ஒரு நாளைக்கு நான்கு லட்சம் மக்கள் வருகின்றனர். ஆனால் அங்கு போதிய வசதி இல்லை என்று தகவல் வருகிறது.

6:23 PM

அத்திவரதர் கோயில் பற்றி கேள்வி எழுப்பி ஸ்டாலின் பேசுகிறார்.

18:36 July 18

செய்தி மற்றும் விளம்பர துறைக்கான புதிய அறிவிப்புகள்!

6:18 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்தி மண்டபம் ரூ.30.52 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

6:15 PM

காயிதே மில்லத் மணிமண்டபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தேவையான புத்தகங்கள், தளவாடங்களுடன் நூலகம் புதிதாக அமைக்கப்படும் என கடம்பூர் ராஜூ.

6:13 PM

தமிழ்நாடு அரசு அச்சகத்திற்கு ரூ.72 ஆயிரம் மதிப்பீட்டில் வருகை பதிவு இயந்திரம் (Bio-Metric Reader), கணினி வழங்கப்படும்.

6:12 PM

தமிழ்நாடு அரசு அச்சகத்தின் சுற்றுப்பகுதியைச் சீர்படுத்த ரூ.29 ஆயிரம் மதிப்பீட்டில் புல் வெட்டும் இயந்திரம் வழங்கப்படும்.

 6:11 PM

புதுக்கோட்டை அரசுக் கிளை அச்சகத்தின் பயன்பாட்டுக்காக காகிதம் கட்டும் இயந்திரம் ஒன்று ரூ.70 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

6:11 PM

திருச்சி, சேலம் அரசுக் கிளை அச்சகத்திற்கு இரண்டு தானியக்க காகிதம் துளையிடும் இயந்திரம் ரூ.3.50 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

6:10 PM

டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, ஊடகவியலாளர் நல நிதியம் உட்பட அனைத்துத்  திட்டங்களும் விரிவுபடுத்தப்படும்.

6:09 PM

எழுதுபொருள், அச்சுத் துறை இயக்ககம் மற்றும் ஒன்பது அலகுகளில் ஆண்-பெண் பணியாளர்களுக்கு ரூபாய் ஒரு கோடி செலவில் கழிப்பறைகள் கட்டித் தரப்படும்.

6:08 PM

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய அறிவிப்பு வெளியிட்டுவருகிறார்.

 6:06 PM

செய்தி மற்றும் விளம்பரத் துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துவருகிறார்.

 

17:10 July 18

சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்! #LiveUpdates

5:46 PM

'தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம்' ஆண்டு தோறும் ரூ.32 லட்சம் செலவில் கொண்டாடப்படும்.

5:45 PM

சொல்லாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள் தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட சாமானிய இயக்குநரை இதழ் ஆசிரியராக கொண்டு சொல் வயல் என்ற பெயரில் மாத இதழ் வண்ணப்படங்களுடன் எழுதுபொருள் அச்சுத் துறை மூலம் வெளியிடப்படும்.

5:43 PM

தொழில் முறை தொடர்பாகவும் பேச்சு வழக்கு தொடர்பாகவும் தமிழ் மொழியில் வழங்கும் மரபுத்தொடர்கள் தொகுத்து 300 பக்கங்களில் தமிழ் மரபுத்தொடர் அகராதி  மூன்று ஆண்டு காலத்திற்குள் வெளியிடப்படும்.

5:42 PM

வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தில் தமிழை இரண்டாம் முறையாக கற்கும் இளநிலை முதுநிலை பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினமாக ரூ.1.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

5:41 PM

வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் அயல் மொழியினருக்கு எளிதாகவும் விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் மொழி ஆய்வுக் கூடம் தொடங்கப்படும். இதற்கான தொடர் செலவினமாக ரூ.9.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

5:40 PM

தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல், தனித்தமிழ் உள்ளிட்ட பணிகளில் பணியாற்றும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பெயரில் விருது தொகையாக ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதிச்சான்று அளிக்க ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

5:38 PM

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெயரில் புதிய விருது தொகையாக ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதிச்சான்று பொன்னாடையும் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

5:37 PM

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

5:36 PM

முதிர்ச்சியடைந்த  பசுவிற்கு செயற்கை முறையில் இனப்பெருக்கம் - சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

5:06 PM

அஞ்சல் தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுக எம்.பி.க்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என எஸ்.பி. வேலுமணி பேசினார்.

4:31 PM

பிற்பகல் நேர சட்டப்பேரவை தொடங்கியது.

10:44 July 18

செங்கல்பட்டு, தென்காசி, கும்பகோணம் புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

​​​​​​110 விதியின் கீழ் செங்கல்பட்டு, தென்காசி, கும்பகோணம்  புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:35 July 18

எந்தெந்த துறைகள் மீது இன்று விவாதம்?

  • விளம்பரத்துறை, எழுதுப்பொருள், அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளிக்கிறார். 
  • தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதமமும் இன்று நடைபெறுகிறது. இந்த துறை மீதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளிக்கிறார்.
     

10:21 July 18

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மானிய கோரிக்கை மீதான விவாதங்களையும், திமுக - அதிமுக இடையேயான காரசார விவாதங்களையும் உடனுக்குடன் வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்குகிறது ஈடிவி பாரத் தமிழ்.

10:00

சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகளை சபாநாயகர் தனபால் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். 

Last Updated : Jul 18, 2019, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details