தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. சரியாக காலை 10 மணிக்கு திருக்குறள் வாசித்து பேரவையை தொடங்கி வைத்தார் சபாநாயகர் தனபால்.
கேள்வி நேரத்தில் பிரச்னை எழுப்பிய எம்எல்ஏக்கள்: நோ சொன்ன சபாநாயகர் - opposition mlas
சென்னை: கேள்வி நேரத்தின்போது சிஏஏ உள்ளிட்டவை குறித்து பேச திமுக உறுப்பினர்கள் அனுமதி கோரிய நிலையில், அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர்
அப்போது திமுக உறுப்பினர்கள் சிஏஏ, என்பிஆர் உள்ளிட்ட போராட்டங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று எழுந்தனர்.
ஆனால், அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், கேள்வி நேரத்தின் போது பிரச்னைகள் குறித்து பேச முடியாது என்றும், அது மரபு அல்ல எனவும் தடை விதித்தார். மேலும், நேரமில்லா நேரத்தின்போது பிரச்னை குறித்து பேசலாம் என்றும் கூறி சட்டப்பேரவை உறுப்பினர்களை சபாநாயகர் அமர வைத்தார்.