எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று அறிவித்தார். அதில், சில முக்கிய அறிவிப்புகள் பின் வருமாறு:
1. எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம் மற்றும் ஒன்பது அலகுகளில் ஆண், பெண் பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கழிப்பறைகள் கட்டித் தரப்படும்.
2. புதுடெல்லியில் பணிபுரியும் தமிழக ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, ஊடகவியலாளர் நல நிதி உட்பட அனைத்து திட்டங்களும் விரிவுபடுத்தப்படும்.
3. திருச்சி மற்றும் சேலம் அரசு கிளை அச்சகத்திற்கு இரண்டு தானியிக்க காகிதம் துளையிடும் இயந்திரம் ரூ.3.50 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.