ஓய்வு பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல்துறை சார்பில் வழியனுப்பு விழா நடைபெறுவது வழக்கம். ஓய்வு பெறக்கூடிய காவல்துறை அதிகாரிகளில், நீதிமன்றங்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முன்னிலையில் நடத்தப்படுகிறது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில், ஓய்வு பெற உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு பாராட்டி வழியனுப்பு விழா இன்று(நவ.26) நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை தாங்கிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்குகள் விசாரணையின்போது குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு மிகச்சிறந்த முறையில் உதவிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
குற்றவியல் வழக்கறிஞர்கள் என்பவர்கள், காவல்துறை தரப்பு, குற்றவாளி தரப்பு என நீதிமன்றத்தின் முன்பு அனைவருக்கும் பொதுவானவர்கள். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் நாங்கள் காப்பாற்ற மாட்டோம் என்றும், அதே வேளையில் நேர்மையான அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.