தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளைப் பின்பற்றியே பெயர் நீக்கம் செய்யப்படுகிறது - சத்யபிரத சாகு

சென்னை:  தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும்  வழிமுறைகளை கடைபிடித்து தான், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

விதிகளை பின்பற்றியே பெயர் நீக்கம் செய்யப்படுகிறது- சத்யபிரத சாகு
விதிகளை பின்பற்றியே பெயர் நீக்கம் செய்யப்படுகிறது- சத்யபிரத சாகு

By

Published : Nov 13, 2020, 3:55 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரத சாகு, "கரோனா சூழல் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வெளியிடவுள்ளனர். இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளிலும், அடுத்த மாதம் 12,13 ஆம் தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஜனவரி மாதம் 20ஆம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்படுவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுவதாக செய்தியாளர் கேட்டகேள்விக்குப் பதிலளித்த அவர், 'வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்குவது தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

பொதுவாக இடம் மாறினால், இறந்தால் மற்றும் இரட்டைப் பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். கரோனாவில் இறந்தாலும், பொதுவாக இறந்தவர்களுக்கு உள்ள விதியான விண்ணப்பப் படிவம் 7 பெற்று தான் நீக்கப்படுகிறார்கள். மேலும், பூத்துகளில் நீக்கப்பட்டவர்களின் பட்டியல் இருக்கும். அதனை அரசியல் கட்சியினர் பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details