சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து இடைக்கால முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். 2 மாதங்களே முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், சில காரணங்களால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்பின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் என்று அதிமுக இரண்டாகப் பிரிந்தது.
பின்னர் மீண்டும் அணிகள் இணைந்தபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது அனைத்து தரப்பினரையும் இந்த ஆணையம் விசாரணை செய்தது.
அதில் ஓபிஎஸை விசாரணைக்கு அழைப்பதற்காக 6 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. பின்னர் ஒரு வழியாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓபிஎஸ், "ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும்போது நான் பார்க்கவில்லை.