தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருள்நிதிக்கு இப்படி ஒரு ரசிகரா...! - திமுக

சென்னை: வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும்விதமாக அருள்நிதி ரசிகர் ஒருவர் இலவசமாக குடிதண்ணீர் வழங்கி வருகிறார்.

drinking water

By

Published : May 2, 2019, 9:31 AM IST

சென்னை பொன்னேரியை சேர்ந்தவர் ரோஸ் பொன்னையன். திமுக பிரமுகரான இவர் நடிகர் அருள்நிதியின் அதிதீவிர ரசிகரும் ஆவார்.

இந்நிலையில் ,நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான 'கே 13' நாளை (மே 3) உலகமெங்கும் வெளியாக உள்ளது.

குடிதண்ணீர்

இதனையடுத்து, ரோஸ் பொன்னையன் சுமார் 20 வேன்களில் குடி தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக்கொண்டு, சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இலவசமாக குடி தண்ணீர் விநியோகித்து வருகிறார்.

தண்ணீர் கொண்டு செல்லும் வேன்களிலும் 'கே 13' படத்தின் விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்டு படத்திற்கு விளம்பரமும் செய்யப்பட்டுவருகிறது.

குடிதண்ணீர்

ABOUT THE AUTHOR

...view details