தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்பப் பதிவு தொடக்கம்! - 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டிலுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 8, 2023, 4:12 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஒரு லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மேலும் ஒரு மாணவர் 5 கல்லூரி வரையில் விண்ணப்பம் செய்வதற்கு பதிவுக்கட்டணமாக பொதுப்பிரிவினர் 50 ரூபாயும் எஸ்.சி., எஸ்.டி. சிறப்புப் பிரிவினர் 2 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 2 ரூபாயும் சேர்த்து மொத்தம் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

SC, ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card/ Net Banking மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15’’ என்ற பெயரில் மே 8ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்தக் கல்லூரிக்கான இணையதளங்களில் வெளியிடப்படும். தமிழ் தரவரிசைப் பட்டியல் 12ஆம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண் அடிப்படையில் பிஏ தமிழ் இலக்கியம், பிலிட் படிப்புகளுக்கு வெளியிடப்படும். 12ஆம் வகுப்பு ஆங்கிலம் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிஏ ஆங்கில இலக்கியப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, பிஎஸ்டபிள்யூ பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு தமிழ், ஆங்கிலம் தவிர மீதமுள்ள நான்கு பாடங்களின் மதிப்பெண்கள் 400-ல் இருந்து தயாரிக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். மாணவர்கள் பதிவு செய்யும்போது கொடுக்கும் செல்போன் எண்ணிற்கு தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான முகவரி இல்லாவிட்டால் பெற்றோர் மின்னஞ்சல் முகவரியை அளியுங்கள் உள்ளிட்ட பல்வேறுத் தகவல்களை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: புதுச்சேரியில் 92.67 சதவீதம் தேர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details