தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய பாண்டவர் அணி - விஷால்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாடகக் கலைஞர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட தென் தமிழ்நாட்டை நோக்கி பாண்டவர் அணியினர் தங்களது பயணத்தை தொடங்கினர்.

File pic

By

Published : Jun 15, 2019, 5:44 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியுள்ளது. இரு அணிகளும் பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டிவருகிறது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த பாண்டவர் அணியின் நாசர் கூறியதாவது, தென் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள நாடகக் கலைஞர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரையை தொடங்கிய பாண்டவர் அணி

2,000 நாடகக் கலைஞர்கள் வாக்கு பாண்டவர் அணிக்குத்தான் என்றும் தெரிவித்தார். மேலும் நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணி நிச்சயம் வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார்.

திருச்சி புதுக்கோட்டை நாமக்கல் கரூர் மதுரை காரைக்குடி திண்டுக்கல் சேலம் வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று நாடக கலைஞர்களை சந்தித்து நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி ஆதரவு கோர உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details