தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை காவல் ஆணையரைப் பாராட்டிய ராணுவ அதிகாரி - Army Commander

சென்னை: தக்‌ஷின் பாரத் ராணுவத் தலைமையிட அதிகாரி ககன்தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

ராணுவ அதிகாரி
ராணுவ அதிகாரி

By

Published : May 3, 2020, 10:36 PM IST

கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த காவலர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சி, மாநகராட்சி அமைப்புகள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். தங்களது உயிர்களைப் பணயம் வைத்து உழைக்கும் இவர்களின் சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சென்னையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வருவதைத் தடுக்க, காவல் துறையினர் தொடர் பணிமாற்று முறையில் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக, சென்னை தக்‌ஷின் பாரத் ராணுவத் தலைமையிட அதிகாரி ககன்தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

சென்னை காவல் ஆணையரைப் பாராட்டிய ராணுவ அதிகாரி

அந்நிகழ்வில் சென்னை பெருநகர் கூடுதல் ஆணையர்கள் ஆர்.தினகரன், ஏ.அருண், பிரேம், எச்.எம்.ஜெயராம் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடர்ந்து கரோனா பாதிப்புக்குள்ளாகும் காவலர்கள்: இன்று மட்டும் 5 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details