சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா(26). இவர் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கீழ்பாக்கம் குட்டியப்பன் தெருவில் உள்ள வாடகை வீட்டில் சக காவலர்களுடன் கடந்த 2 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்தார்.
கடந்த வருடம் சாதிக் பாஷாவிற்கு சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியிட மாறுதல் வழங்கியும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் சாதிக் சாதிக் பாட்ஷாவிற்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கு செல்வதாக சக காவலர்களிடம் சாதிக் பாட்ஷா தெரிவித்துள்ளார்.
நேற்று சக காவலர்கள் பணியை முடித்து வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த காவலர்கள் உடனடியாக பூட்டை உடைத்து கதவை திறந்த போது சாதிக் சாதிக் பாட்ஷாஅறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.