சென்னை: சென்னை விமான நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, 'தருமபுர ஆதீன நிகழ்ச்சிக்குச் சென்ற ஆளுநருக்கு பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. ஆளுநர் செல்லக்கூடிய நேரத்தைத்தெரிந்து வேண்டுமென்றே அந்த இடத்தில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி, ஆளுநர் சென்ற கான்வாயின் மீது அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மன்னிப்புக்கேட்க வேண்டும்: அத்தோடு ஆளுநருக்கே பாதுகாப்பில்லாத சூழல் என்று இச்சம்பவம் குறித்து அண்ணாமலை தெரிவித்தது நியாயமானது. ஆனால், முதலமைச்சர் மன்னிப்புகேட்காமல், அதை நியாயப்படுத்தி தவறான தகவலைத்தெரிவித்து வருகின்றார். மேலும், தமிழ்நாட்டில் திமுகவால் வன்முறை, பிரிவினைவாதம், கொலை சூழல் நிலவுவதோடு 10 மாத ஆட்சியில் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது.