தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் மாணவன் தற்கொலை: ரூ. 7 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை! - ariyalur student commit suicide

சென்னை: நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Sep 10, 2020, 3:24 PM IST

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ்(19), நீட் தேர்வு காரணமாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அவரது குடும்பத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் நிதியுதவியும், தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மருதூர் மதுரா எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ், மன உளைச்சல் காரணமாக செப்டம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் துயரமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு, அரசு சார்ந்த பணி வழங்கப்படும். அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தினை அறிந்து நல்வழிப்படுத்திட வேண்டும்.

மாணவ செல்வங்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த மனவேதனையளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முதலமைச்சரை பாராட்ட மனமில்லாத ஸ்டாலின் - பொள்ளாச்சி ஜெயராமன்

ABOUT THE AUTHOR

...view details