சென்னை: சென்னை, ராமாபுரம் பகுதியில் கோவில் ஒன்றின் பெயரில் பல கட்சிகளை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து அறப்போர் இயக்கம் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் அரசு நிலங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சென்னை, ராமாபுரம் பகுதியில் கோவில் ஒன்றின் பெயரில் பல கட்சிகளை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். அரசு நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அறப்போர் இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்காக ராமாபுரம் காவல்துறை ஆய்வாளர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள், அறப்போர் இயக்கத்தின் நிர்வாகி நக்கீரன் மீது பொய் வழக்கு போட்டு அதிகாலையில் தீவிரவாதியை போல கைது செய்தனர். அரசு இடம் தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.