தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: உடற்கல்வி ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நவம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள்
உடற்கல்வி ஆசிரியர்கள்

By

Published : Oct 28, 2020, 8:29 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்காக 551 நபர்களின் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தின் வாயிலாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பணி நியமன ஆணையை பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் உரிய காலத்திற்குள் பணியில் சேரவில்லை என்றால் அவர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details