தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகரப் போக்குவரத்துக் கழக ஐடிஐ-இல் வெளி மாணாக்கர் சேர்க்கைக்கு அழைப்பு - எம்டிசி

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக ஐடிஐ-இல் வெளி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Madras transport corporation ITI training
மாநகர போக்குவரத்து கழகம்

By

Published : Aug 25, 2020, 10:39 PM IST

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக ஐடிஐ-இல் கம்மியர், மெக்கானிக் ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் வெளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ. கணேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடத்தும் இந்த ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் 1984 முதல் 2009 வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மட்டும் சேர்க்கை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு முதல் வெளி மாணவர்களுக்கென 72 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகங்களில் தொழில்பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதுவரை ஆயிரத்து 207 மாணவர்கள் இந்தப் பள்ளி மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற, தகுதிவாய்ந்த மாணவர்கள் மேற்கூறப்பட்ட படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்களை குரோம்பேட்டையில் உள்ள பயற்சி நிலையத்தில் நேரடியாகவும், www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி நாள் 30.09.2020 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் சான்றிதழ் பதிவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details