தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு இலவசமாக பயிற்சிபெற விண்ணப்பம் வெளியீடு! - TN Government Directorate of College Education

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடந்த 14ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சிக்கு விண்ணப்பம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சிக்கு விண்ணப்பம்

By

Published : Nov 16, 2022, 10:35 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் இராணி மேரி கல்லூரி (த) மற்றும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வலைதளத்தில் 14ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

அதனைப் பதிவிறக்கம் செய்து 20ஆம் தேதிக்குள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுத் தேர்வு, நேர்காணல் மற்றும் பயிற்சி வகுப்புகள் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதிகள் மற்றும் தேர்வு சம்மந்தமான விவரங்கள் அனைத்தும் விண்ணப்ப படிவத்திலும் இராணி மேரி கல்லூரி (த) : www.queenmaryscollege.edu.inஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி (த) : www.smgacw.orgஎன்ற இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'மைசூரிலிருந்து 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ்நாடு வந்துள்ளது'

ABOUT THE AUTHOR

...view details