தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பம் - 11ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பாடங்களை துணைத்தேர்வில் எழுதுவதற்கு ஜூன் 26ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

11ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பம்
11ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பம்

By

Published : Jun 27, 2022, 3:58 PM IST

சென்னை:11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை துணைத்தேர்வில் எழுதுவதற்கு ஜூன் 26ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், '11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத பள்ளி மாணவர்கள், மீண்டும் அந்தப்பாடங்களை எழுதுவதற்கு ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரையில் அவர்கள் பயிலும் பள்ளியில் விண்ணப்பிக்கலாம்.

அதேபாேல் தனித்தேர்வர்கள் அரசுத்தேர்வுத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம், ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல் அறிவுரைகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பம் செய்யாதவர்கள் சிறப்புத்திட்டத்தின்கீழ் ஜூலை 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை உரிய கட்டணத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்ய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

எனவே, ஒப்புகைச்சீட்டினைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தேர்வர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் நடைபெறும். அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 2ஆம் தேதி மாெழித்தாள்; ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆங்கிலம்; ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், உயிர் வேதியியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், சிறப்புத் தமிழ், மனை அறிவியியல், அரசியியல் அறிவியல், புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், நர்சிங் (தொழிற்கல்வி);

ஆகஸ்ட் 5ஆம் தேதி இயற்பியல், பொருளியியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்; ஆகஸ்ட் 6ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, அடிப்படை கணக்கு மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோ மாெபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநூல் தொழில் நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்;

ஆகஸ்ட் 8ஆம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், ஆடை வடிவமைப்பு மற்றும் நெசவுத்தொழில், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது); ஆகஸ்ட் 10ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடத்தப்படுவதாக' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details