தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்! - application distribution for medical degree

சென்னை: யோகா மற்றும் இயற்கை (B.N.Y.S.) மருத்துவப் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்-லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

application-distribution-for-medical-degree-of-bnys
application-distribution-for-medical-degree-of-bnys

By

Published : Aug 25, 2020, 10:58 AM IST

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை மற்றும் சுய நிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21ஆம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். (B.N.Y.S.) மருத்துவப் பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வில், அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இவற்றை உரிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

2. விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 28-08-2020 அன்று மாலை 05.00 மணி வரை மட்டும் அலுவலக வலைதளமான “www . tnhealth.tn.gov.in” யிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலிருந்தோ அல்லது கல்லூரிகளிலிருந்தோ வழங்கப்பட மாட்டாது.

3. விண்ணப்பக் கட்டணம்: விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவம்: ரூ. 500; சிறப்புப் பிரிவு விண்ணப்பம் : ரூ . 100 - ( ஒவ்வொரு சிறப்புப் பிரிவிற்கும்) பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவத்தை தபால் / கூரியர் சேவையின் மூலமாகவோ, நேரிலோ சமர்ப்பிக்கும் போது விண்ணப்பக் கட்டணமான ரூ .500/-ஐ நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 03-08-2020 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பெறப்பட்ட கோடிட்ட கேட்பு வரைவோலையை (Demand Draft) இணைத்து அனுப்ப வேண்டும். அக்கேட்பு வரைவோலை சென்னையில் பணமாக்கக்கூடியதாகவும் , “ இயக்குநர் , இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி , சென்னை 106 ” ( “ Director of Indian Medicine and Homoeopathy , Chennai - 106 " ) என்றப் பெயரிலும் இருத்தல் வேண்டும்.

4. தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம்/பட்டியல் இனம் (அருந்ததியினர்) / பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மேற்படி விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்திற்கான தொகை ரூ .500 / -யை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

5. சிறப்புப் பிரிவினர்
1. முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ,
2. விளையாட்டு வீரர்கள்,
3. மாற்றுத் திறனுடையோர்
4. யூனியன் பிரதேசம் / பி.என்.ஒய்.எஸ் . ( B.N.Y.S. ) கற்பிக்கும் கல்லூரிகள் இல்லா மாநில மாணவர்கள்.

6. சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மேற்கூறிய பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவத்துடன் சிறப்பு பிரிவிற்கான சிறப்புப் பிரிவு படிவத்தினை பூர்த்தி செய்து “ இயக்குநர் , இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி , சென்னை- 106 ” என்ற பெயரில் 03-08-2020 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ எடுக்கப்பட்ட ரூ .100 / -க்கான சென்னையில் பணமாக்கக்கூடிய கோடிட்ட கேட்பு வரைவோலையை (ரூபாய் நூறு மட்டும்) எடுத்து ஒவ்வொரு சிறப்புப் பிரிவிற்கும் தனித்தனியாக, அதிகப்பட்சம் மூன்றிற்கு மிகாமல் மட்டும் இணைத்து ஒரே உறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் அவர்கள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு சான்றிதழ்களைப் பெற்று அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன்பிறந்தோர், இந்த சலுகையை பயன்படுத்தியிருக்கக் கூடாது . விருப்பப்படிவத்துடன ; கூடிய பொது விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 28-08-2020 மாலை 05.00 மணி வரை.

நிறைவு செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன கூடிய பொது விண்ணப்பத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31-08-2020 மாலை 5.30 மணிக்குள் தபால் அல்லது கூரியர் மூலமாக வந்து சேரவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ வேண்டும். அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

முகவரி: செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம் , அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம் , அரும்பாக்கம் , சென்னை- 600 106 .

8. அஞ்சல்துறை மற்றும் கூரியர் நிறுவனத்தில் கடைசி நாளுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் வந்து சேரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது . இது குறித்து எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்பட மாட்டாது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கட்டணத் தொகையினை பத்தி 3ல் குறிப்பிட்டுள்ளவாறு பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.
இணையதள முகவரி : "http / www.tnhealth.tn.gov.in.'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேசிய மாற்றுப்பாலினத்தவர் ஆணையப் பிரதிநிதியாக மதுரையைச் சேர்ந்தவர் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details