சென்னை: மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தும் எஸ்எஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்காக இன்று (பிப்.17ஆம் தேதி) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடியும் தருவாயில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப்.16ஆம் தேதி) எஸ்எஸ்சி இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் இயக்குநருக்கு எஸ்எஸ்சி தேர்வுக்கு கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.