தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் 450 தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பு! - சென்னை சிட்லபாக்கம்

சென்னை: சிட்லப்பாக்கம் பேரூராட்சி, குரோம்பேட்டை தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் வாகன உதவியுடன் 450 தெருக்களில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கிருமி நாசினி தெளித்த தீயணைப்பு துறையினர்
கிருமி நாசினி தெளித்த தீயணைப்பு துறையினர்

By

Published : Mar 26, 2020, 9:55 PM IST

சென்னை சிட்லப்பாக்கம் பேரூராட்சி, குரோம்பேட்டை தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் வாகன உதவியுடன் 450 தெருக்களில் கரோனா வைரஸ் பரவமால் தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் சிறப்பு பேரூராட்சியில் இருக்கும் 450 தெருக்களில் சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குரோம்பேட்டை தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் கரோனா வைரஸ் பரவமால் தடுக்க அனைத்து சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கிருமி நாசினி தெளித்த தீயணைப்பு துறையினர்

மேலும் அருகில் உள்ள கடைகளிலும் கிறுமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதனால், சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களும், சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நகர்ப்புற பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

ABOUT THE AUTHOR

...view details