சென்னை: அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்ட சோதனை என்றார்.
"120 ஆவணங்கள், ரொக்கம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் என் வீட்டில் இருந்து என்னுடைய 2 கைபேசிகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். கூடுதலாக என்னுடைய மற்றும் என் குடும்பத்தாருடைய ஆதார், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களைத்தான் அலுவலர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
சோதனை நடைபெற்றது எனக்கு தொடர்புடைய இடங்களா என நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். இந்த சோதனை மட்டுமல்ல இதுபோன்ற எத்தனை சோதனைகளை மேற்கொண்டாலும் அவற்றையெல்லாம் சட்ட ரீதியாக சந்திக்க நானும் அதிமுக கழகமும் தயாராக உள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த சோதனையை ஆளும் அரசு நடத்துகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யச் சொல்லுங்கள், அதையும் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன்" என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக போராட்டம் அறிவித்தால், திமுக அரசு ரெய்டு விடுகின்றது - தாக்கிய ஜெயக்குமார்