தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்ஐஏ சோதனையை முறைப்படுத்த அன்சாரி வலியுறுத்தல்! - முஸ்லிம் இளைஞர்கள்

சென்னை: தேசிய புலனாய்வுத்துறை சோதனையை முறைப்படுத்த வேண்டும் என்று மனித நேய ஜனநாய கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

Ansari's request to regularize NIA operations

By

Published : Jul 18, 2019, 11:28 PM IST

அவர் சட்டப்பேரவையில் பேசுகையில், "பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் என்ஐஏ அலுவலர்கள், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறி வைத்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது. இதனால் அந்த குடும்பத்தினர் பலவகைகளில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

என்ஐஏ சோதனையை முறைப்படுத்த அன்சாரி வலியுறுத்தல்!

வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழக முஸ்லிம் இளைஞர்கள் பள்ளிவாசல்-மதரஸா கட்டுவதற்கு நிதி திரட்டினால் அது பயங்கரவாதத்துக்கு திரட்டியதாக என்ஐஏ செய்தி பரப்புகிறது. எனவே என்ஐஏவின் செயல்பாடுகள் ஒரு சமூகத்தை மட்டுமே குறி வைத்து செயல்படுவதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது" என்று வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details