அக்டோபர் 25ஆம் தேதி இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 80 மணி நேர போராட்டத்திற்கு சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் மரணம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்ற வேண்டும் என அரசு அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துவருகிறது.
இதுபோன்ற மரணம் இனியும் தொடராமலிருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள், முறையாக மூடப்படாத கிணறுகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்தில் மூடப்பட வேண்டும் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.