தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியில் தேர்வு செய்தவற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கிராம நிர்வாக உதவியாளர் (397), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2688), இளநிலை உதவியாளர் (பிணையம்) (104), வரித் தண்டலர் நிலை பணியில் (39), நில அளவர் (509), வரைவாளர் (74), தட்டச்சர் (1901), சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை மூன்று பணியில் (784) பணியிடங்களில் என 6,491 இடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு இணைய வழி மூலம் (14.6.2019) முதல் (14.7.2019) அன்று இரவு 11.59 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் காலிப்பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களில் வகுப்பு, பிரிவுகள், கல்வித்தகுதி, உடற்தகுதி, தகுதிக்கான வயது ஆகியவை முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பம், புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள், கையொப்பம் போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த தவறான தகவல் கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர் திருத்தம் செய்ய முடியாது.