கேரள கடலோர பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (நவ. 28) அறிவித்தது.
இதனிடையே தூத்துக்குடி, தேனி, விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.