சென்னை:இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 754 திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருந்துவருகிறது.
கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானத் திட்டத்தினைத் தொடங்கிவைத்தார். இத்திட்டம் பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.