சென்னை:ஆவின் பால் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு, ஊதா நிற டிலைட் பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவெடுத்த நிலையில், இதற்கு அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்து, குழந்தைகளின் வளர்ச்சியில் திமுக அரசு விளையாடுகிறது என்றும், தரமற்ற பாலை கொடுத்து திமுக அரசு ஊழல் செய்கிறது என தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அண்ணமலையின் பதிவு குறித்து அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளிந்திருந்தார். இதற்கு அண்ணாமலை தனது X தளத்தில், “இன்றைய உங்கள் (அமைச்சர் மனோ தங்கராஜ்) செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று, ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது தமிழக மக்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு” என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் மனோ தங்கராஜ், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையைதான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா?