தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் கோட் சூட் போட்டால் பிரதமர் மோடி ஆகிவிட முடியாது - அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டுகள் நிறைவு சாதனை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல், மோடியின் அமெரிக்கப் பயணம் ஆகியவை குறித்து உரையாற்றினார்.

செங்கல்பட்டு:முதல்வர் ஸ்டாலின் கோட் சூட் போட்டால் பிரதமர் மோடி ஆகிட முடியாது! :அண்ணாமலை
செங்கல்பட்டு:முதல்வர் ஸ்டாலின் கோட் சூட் போட்டால் பிரதமர் மோடி ஆகிட முடியாது! :அண்ணாமலை

By

Published : Jun 21, 2023, 7:26 AM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டுகள் கால நிறைவு சாதனை பொதுக்கூட்டம் நேற்று (ஜூன் 21) செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டம் தமிழகம் எங்கும் பாஜகவினாரல் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பொதுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியபோது, ''பிரதமரின் அமெரிக்கப் பயணம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச் செய்யும். தனது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து வெறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அது கூட வராது.

கோட் சூட் போட்டால் மட்டும் யாரும் மோடி ஆக முடியாது. தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவுவினை ஏற்படுத்தும் ஆட்சியை, முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். திமுகவினர் அடித்த கொள்ளையைப் பார்த்து, காங்கிரஸ் கட்சியினரே பயந்து விட்டதால்தான் 2009ல், மத்திய அமைச்சரவையில், டி.ஆர்.பாலுவிற்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலின் ஓர் சர்வாதிகாரி.. இந்தியாவுக்கு தலைவராகும் திறன் கொண்டவர் அண்ணாமலை.. ராஜ்நாத் சிங் சென்னையில் பேச்சு!

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் சுமார் 55 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை, 35 ஆயிரம் குடும்பத்துக்கு சிலிண்டர் உள்ளிட்ட அடிப்படை மாற்றத்திற்கான விதை போடப்பட்டது. தி.மு.கவைப் பார்த்தாலே, அகில இந்திய தலைவர்கள் ஓடுகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

2029-க்குள் 300 விமான நிலையங்களை அமைப்பதே மோடியின் திட்டம், 2026 மார்ச் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மக்கள் பயண்பாட்டிற்காக பிரதமர் மோடி அர்ப்பணிப்பார். பல்வேறு கட்டுமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் சட்டமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர்.

இந்நிலையில், இனி எந்த கட்டுமானப் பணியும் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்ட பி.எஸ்.டி நிறுவனத்திற்கு மீண்டும் தமிழக அரசின் 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதிநுட்ப மையம் கட்டுவதற்கு ஆணை வழங்கபட்டிருப்பதே திமுகவின் ஊழலுக்கு உதாரணம்’’ என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசியவர், ''தமிழக பாஜக உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்து வருகிறது. அனைத்து தமிழர்களுக்காகவும் பாடுபடும். அதனால்தான் லண்டனில் உள்ள தமிழர்களைச் சந்தித்து பிரதமரின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து அவர்களிடமும் ஆதரவு கேட்க உள்ளேன்'' எனத் தெரிவித்தார்.

மேலும், 2024 தேர்தலில் பாஜகவை 39 இடங்களில் வெற்றி பெறச் செய்ய கட்சியினர் தீவிரமாக செயலாற்ற வேண்டும் எனவும், திமுகவில் ஒருவர் கூட நாடாளுமன்றத்திற்கு செல்லக் கூடாது என்ற முடிவுடன் தொண்டர்கள் பணியாற்றுங்கள் என்றார்.

இதையும் படிங்க:ஆருத்ரா நிறுவண மோசடி குறித்து 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details