சென்னை: அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழ்நாடு அதன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரக்கூடிய சூழலில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சி திமுக மற்றும் எதிர் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக கட்சிப் பணிகளை தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக-வின் யுக்தி இதனையடுத்து, தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள திட்டமிடும் பாஜக-வும் தேர்தலுக்கான பணியினை தற்போது தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே இரண்டு திராவிட கட்சிகளும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமனம் செய்து, பொதுக்கூட்டங்கள், திட்டப்பணிகள் என தீவிரமாக காய்களை நகற்றி வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக ஏற்கனவே விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்களை நியமித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று(நவ.29) அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக-வின் யுக்தி தமிழ்நாட்டின் பிரதாண மாநிலக்கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டங்கள், நலத்திட்டப்பணிகள் என தற்போது வரை மேலோட்டப் பணிகளை அணிவகுத்து, முக்கிய பணியாக கருதப்படும் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அறிவிக்காத நிலையில் பாஜக தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பாஜகவின் தேர்தல் யுக்தியாகக்கூட இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக-வின் யுக்தி 39 தொகுதிகளில் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்களின் பட்டியல்:திருவள்ளுவர் தொகுதிக்கு என்.எல்.நாகராஜன், தென் சென்னைக்கு பாஸ்கர், மத்திய சென்னைக்கு ராதாகிருஷ்ணன், வட சென்னைக்கு பெஃப்சி ஜி.சிவக்குமார், சிதம்பரத்திற்கு எஸ்.ஜி.சூர்யா, தூத்துக்குடிக்கு மகாராஜன், தென்காசிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், நாமக்கல் தொகுதிக்கு பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உட்பட 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலை இன்று(நவ.29) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"சிறுபான்மை மக்களை திமுக தந்திரமாக ஏமாற்றி வருகிறது" - எடப்பாடி பழனிசாமி சாடல்!