சென்னை: 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள 47 முக்கிய திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று (ஆக.5) மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கி வைத்தார்.
அதன்பின் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் அடங்கிய விவரப் பலகையைத் திறந்து வைத்தார். அமைச்சர் முன்னிலையில் வேங்கடசுப்பரமணியம், கபாலி குருக்கள், பாலாஜி குருக்கள் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்தனர்.
மேலும் 500 கோயில்களில்..
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தற்போது இங்கு மூன்று அர்ச்சகர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 500-க்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்படும்.