சென்னை:அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமிஷனுக்கு கால நீடிப்பு வழங்கக்கூடாது என ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆசிரியர்கள் சங்கம், "அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீது எவ்வித அடிப்படை ஆதாரமின்றி எழுதப்பட்ட கடிதங்களில் கண்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஒரு நபர் விசாரணை கமிஷனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்க முன்பு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் கமிஷன் தொடர் விசாரணைகளை நடத்தியும், சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் எவ்வித முகாந்தரமும் இருப்பதாகத் தெரியவில்லை. கரோனா முழு அடைப்புக்கு பிந்திய கல்விப் பணியில் கவனம் செலுத்த வேண்டிய ஆசிரியர்களின் முழுக்கவனமும் இந்த விசாரணையின் மூலம் திசை திருப்பப்பட்டு தொய்வு நிலையிலேயே உள்ளது. விசாரணைக்கு தொடர்பில்லாத விவகாரங்களை கேட்டு, காலத்தை விரயம் செய்வதன் மூலம் கல்வியின் மீதான கவனமும் சிதறடிக்கப்படுகிறது.