பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடுவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் முழுமையாக முடிவடையாததால் 20ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை.
பொறியியல் கலந்தாய்வுத் தேதி அதிரடி மாற்றம்!
சென்னை: பொறியியல் படிப்பில் சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகின்ற 25ஆம் தேதிக்கு மாற்றம் செய்ப்பட்டது.
எனவே அவர்களுக்கு கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டதால் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி கலந்தாய்வும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 26ஆம் தேதியும், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்தப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களை நேரடியாக அழைத்து நடத்தப்படும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.