தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முக்கிய ஆவணங்களை தர அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு: குற்றஞ்சாட்டிய விசாரணை அலுவலர் - investigation official

சென்னை: துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணைக்கு தேவையான முக்கிய ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் தர மறுப்பதாக விசாரணை அலுவலர் தெரிவித்துள்ளார்.

முக்கிய ஆவணங்களை தர அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு
முக்கிய ஆவணங்களை தர அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு

By

Published : Jan 6, 2021, 2:11 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான விசாரணை அலுவலராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமனம் செய்து நவம்பர் 11ஆம் தேதி உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டார்.

விசாரணை அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்ட கலையரசன் தனக்கு வந்த புகார்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியிடம் கேட்டார். ஆனால் ஆவணங்களை ஒப்படைக்காததால் அவருக்கு சம்மன் அனுப்பி ஆவணங்கள் பெறப்பட்டன. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரி அலுவலர்கள் ஆகியோரிடமிருந்தும் சில ஆவணங்கள் கேட்கப்பட்டன.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் துணைவேந்தர் சூரப்பா மீது புகார் அளித்தவர்களை அழைத்து விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணை முடிவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய ஆவணங்கள் தர மறுப்பு

சூரப்பா மீதான புகார்களை விசாரணை அலுவலர் கூறும்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணைக்கு தேவையான முக்கியமான ஆவணங்களை தருவதற்கு மறுத்து வருகின்றனர். ஆனாலும் அரசு நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் நியமனம், தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் நடைபெற்ற குழப்பங்கள், பல்கலைக்கழகத்தின் வரவு-செலவு செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

இதையும் படிங்க:சூரப்பா விவகாரம்! - அண்ணா பல்கலை. பதிவாளரிடம் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details