சென்னை:அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொறியியல் கல்லூரிகளில் 2001ஆம் ஆண்டு முதல் படித்து அரியருடன் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி 20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாதம் நடக்கும் செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதலாம். தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று (செப்.24) முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.