கரோனா பரவல் காரணமாக பொறியியல் இறுதியாண்டு தவிர்த்து செமஸ்டர் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் நவீன மென்பொருள் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை ஆன்லைனில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் முடிவு - anna university online exam
சென்னை: பொறியியல் படிப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
anna
கணினி முன்னால் ஆன்லைன் தேர்வுக்கு அமரும் மாணவரை தவிர்த்து வேறு நபர்கள் யாரும் உள்ளனரா என்பன உள்ளிட்டவற்றை மொத்தமாக கண்காணிக்கும் வகையில், மென்பொருள் உதவியுடன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஆன்லைன் தேர்வு சமயத்தில் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்கும் வகையில், பிரத்யேகமான மென்பொருளை தயாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் டெண்டர் கோரியுள்ளது.
இதையும் படிங்க:ஆன்லைன் கல்வியால் தீங்கு அதிகம் - கதறும் பெற்றோர்கள்!