அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பற்றிய ’நேர்மையின் பயணம்’ என்ற நூலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை வெளியிடுகிறார். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி மற்றும் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் கிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பற்றிய வரலாறு ’நேர்மையின் பயணம்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதப்பட்டுள்ளது.
நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புத்தகத்தை வெளியிட, கேரள முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம் பெற்றுக்கொள்கிறார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், சிறிய கிராமத்தில் பிறந்து தனது முயற்சியால் உயர் பதவிகளை அடைந்தவர் பாலகுருசாமி.