தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: அண்ணா பல்கலை. அறிவிப்பு - பொறியியல் முதல் கட்ட கலந்தாய்வு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவுபெற்றதாகவும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் 5,972 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

anna university
anna university

By

Published : Oct 6, 2021, 7:42 AM IST

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று (அக். 5) முதல்கட்ட கலந்தாய்வு நிறைவுபெற்றது. இந்தப் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் 14 ஆயிரத்து 788 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், பத்தாயிரத்து 148 பேர் பங்கேற்றனர்.

பொறியியல் படிப்பில் சோ்வதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்புக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம்) கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 பேரிடமிருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்பு சோ்க்கைக்குச் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் தொடங்கியது.

கலந்தாய்வில் 14 ஆயிரத்து 788 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 10 ஆயிரத்து 148 பேர் பங்கேற்றதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் ஐந்தாயிரத்து 972 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முடிவடைந்தது நேர்காணல்: அடுத்த துணைவேந்தர் யார்?

ABOUT THE AUTHOR

...view details