சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் B.Voc Logistics Managementமற்றும் B.Voc Footware manufacturing ஆகிய பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு வரும் 31ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கக்கூடிய திறன் மேம்பாட்டு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெற வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ், நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் B.Voc படிப்பு தொடங்குவது பற்றி அறிவித்தார்.
B.Voc பட்டப்படிப்பு அக்.31 கடைசி நாள்:அதன்படி B.Voc Logistics Management மற்றும் B.Voc Footware manufacturing என்ற இரண்டு புதிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு இந்த படிப்பின் அருமை தெரியாமல் சேர்க்கை சரியாக நடைபெறவில்லை. அதனால், ஐந்து மாணவர்கள் மட்டுமே இப்படிப்புக்கு விண்ணப்பம் செய்தனர். காஞ்சிபுரம் மற்றும் ஆரணியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளன. இரண்டு பட்டப் படிப்புகளிலும் தலா 40 இடங்கள் வீதம் உள்ளன. இதில் மாணவர்கள் சேர்ந்து படித்து பயன்பெற வேண்டும். இந்த படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் அக்.31 ஆம் தேதி. ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான கல்லூரிகளில் அட்மிஷன் முடிந்த காரணத்தால் அது குறித்து தெரிவிக்க விரும்புகிறேன்.
படிக்கும்போதே பயிற்சியுடன் வேலைவாய்ப்பு:இந்த படிப்புகளுக்கு உலக அளவில் தேவை என்பது அதிகமாக உள்ளது. மேலும் அதனுடன், Sector skill council துணையுடன் இரு பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், வேலைவாய்ப்பு பிரச்சனை இருக்காது. பட்டப்படிப்பு ஆறு பருவங்களாக என மூன்று ஆண்டு நடத்தப்படும். மேலும் பட்டப்படிப்பிற்கு இணையானது. இந்தியாவில் 37 செக்டர் skill council உள்ளது. அவர்கள் துணையுடன் செயல்படுவதால் தொழிற்சாலைகளில் படிக்கும் போதே, பயிற்சி பெற முடியும் என்பதால் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.இதுவரை 5 முதல் 6 பேர் தான் அட்மிஷன் போட்டுள்ளனர். இந்தப் படிப்பில் சேர்வதற்கு இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது.