சென்னை: அஞ்சலி நடித்து, ஹாஸ்டாரில் வெளியாக உள்ள “ஃபால்” வெப் சீரீஸ்-ன் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த தமிழில் தயாராகியுள்ள இந்த வெப் சீரீஸ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்” சீரீஸ் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.
இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.
ஒரு இளம் பெண்ணுக்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை தேட ஆரம்பிக்கிறாள், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, எது உண்மை யாரை நம்புவது எனும் குழப்பம் உண்டாகிறது. மறந்து போன தன் நினைவுகளிலிருந்து உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறாள்.
‘ஃபால்’ (Fall) தொடரை இயக்கியதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. இத்தொடருக்கு அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார். இந்த ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்’ தொடர் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:தற்போது தான் கமல்ஹாசனை நேரில் பார்க்கிறேன் - புகழ்!