சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆக. 28) நடைபெற்றது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, "கடல்நீர், உவரி நீர் மூலமாக மீன்பிடி செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் நலன் காக்க கருணாநிதி ஆட்சி காலத்தில் மீனவ நல வாரியம் தனியாக அமைக்கப்பட்டது. மீன்பிடி தடைக்காலத்தில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
மீன்பிடிக்க பயன்படுத்தும் நாட்டுப்படகிற்கு மண்ணெண்ணெய் வாங்க ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் வழங்கினார். குளச்சல், தேங்காய்பட்டணம், நாகை மீன்பிடி துறைமுகத்தை கலைஞர் அமைத்துக்கொடுத்தார். மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படை தமிழ்நாடு மீனவர்களை தாக்காமல் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.