தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷாருக்கான் உயரத்திற்கு செல்ல அர்ஜுன் தாஸ்க்கு தகுதி உள்ளது :இயக்குநர் வசந்தபாலன் - சென்னை

அர்ஜுன் தாஸ்-துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அநீதி' திரைப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் ஷாருக்கான் போன்ற உயரத்திற்கு செல்ல அர்ஜுன் தாஸ்க்கு தகுதி உள்ளது என இயக்குநர் வசந்தபாலன்.

aneethi-movie-press-meet-at-chennai
ஷாருக்கான் உயரத்திற்கு செல்ல அர்ஜுன் தாஸ்க்கு தகுதி உள்ளது :இயக்குனர் வசந்தபாலன்

By

Published : Jul 8, 2023, 3:18 PM IST

சென்னை :இயக்குநர் வசந்தபாலன் தமிழ் சினிமாவில் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வலியையும் திரையில் செதுக்கும் உன்னத படைப்பாளி. இவரது முதல் படமான ”வெயில்” வாழ்க்கையில் தோற்றுப்போன ஒருவனது கதையை கண்கலங்க வைக்கும் வகையில் சொல்லி வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து ”அங்காடி தெரு” என்ற படத்தின் மூலம் இதுவரை நாம் கடந்து சென்ற சென்னையில் உள்ள ரங்கநாதன் தெரு துணிக்கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

கடைசியாக ஜெயில் என்ற படத்தை இயக்கியிருந்த வசந்தபாலன் தற்போது அநீதி படத்துடன் வந்துள்ளார். இப்படம் வருகிற 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது,

கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அநீதி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வசந்தபாலன், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், கார்த்திக் நேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்ட பின்னர்,

அர்ஜூன் தாஸ் பேசும்போது,வசந்தபாலன் என்னை அழைக்கும்போது வில்லன் வேடம்தான் என்று நினைத்தேன். மூன்று மணி நேரம் கதை சொன்னார். அவருடைய படத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

வசந்தபாலன் பேசும்போது , அநீதி அறம் பேசும் படம். உங்களிடம் அன்பை வேண்டி நிற்கிறது. மனிதன் பேராசை கொண்டவன். மிருகம் போன்றவன். அவனை அறத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று சொல்லும் படமே அநீதி. சிறு அன்புதான் எல்லோரும் எதிர்பார்ப்பது. நான் கரோனா காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் என் வாழ்க்கையை திருப்பி கொடுத்தவன். நான் கஷ்டப்பட்டு நிற்கும் தருணத்தில் எனக்கு உதவியவர் இயக்குநர் சங்கர். இப்படத்தை வெளியிடுகிறார். முப்பது வருடமாக அவரிடம் உதவியாக இருக்கிறேன். ஜிவி.பிரகாஷ் குமார் அடைந்துள்ள உயரம் மிகப் பெரியது. நான் இருக்கிறேன் என்று சொன்னவர். இத்தனை அன்புக்கு நான் தகுதியானவனா என்ற கேள்வி தான் எழுகிறது என்றார்.

மேலும் அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று இருக்கிறார் என்கிறார்கள். ஷாருக்கான் போன்ற உயரத்திற்கு செல்ல அர்ஜுன் தாஸ்க்கு தகுதி உள்ளது. நான் இதுவரை எடுத்த படங்களில் இது மிகவும் விறுவிறுப்பான திரைப்படமாக இது இருக்கும்.

மதயானை அரசாளும் காட்டில் தனக்காக இடம் தேடும் ஈசல்தான் இப்படம். எனது மொத்த உழைப்பும் இந்த படத்துக்காக போட்டுள்ளேன் உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும் நன்றி என்று பேசினார்.

இதையும் படிங்க :வெற்றிமாறன் வெளியிட்ட 'படவா' முதல் தியேட்டரில் தீனிகளுக்கு 5% ஜிஎஸ்டி வரை.. இந்த வார சினிமா அப்டேட்கள்!

ABOUT THE AUTHOR

...view details