1997ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் காவல் நிலையத்தை தமிழர் விடுதலை படையைச் சேர்ந்தவர்கள் பைப் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வீச்சறுவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். அங்கிருந்த போலீசாரை அறையில் அடைத்து விட்டு, காவல் நிலையத்தில் இருந்த 5 பெரிய துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், தொலை தொடர்பு கருவிகள், போலீஸ் உடைகள், தோட்டாக்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழர் விடுதலை படையை சேர்ந்த சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன், நாகராஜன், செங்குட்டுவன் என்கிற மாறன், ஜான் பீட்டர், உத்திரபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா ஆகியோரை கைது செய்த பெரம்பலூர் கியூ பிரிவு போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.