ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் அவர்களின் வேண்டுகோளின் படி ஷ்ராமிக் சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்து, அதன் மூலம் சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்களை மத்திய - மாநில அரசுகள் அனுப்பி வைத்து வருகின்றது.
இந்த நிலையில் இதேபோல் மும்பையில் சிக்கித் தவித்த ஆயிரத்து 500 தமிழர்களை நேற்று முன் தினம் (மே 23) இரவு ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்து ரயிலானது புறப்பட்டுள்ளது. பின்னர் பயணிக்கும் பொதுமக்களுக்கு காலை வரை அரசு ஏற்பாடு செய்த உணவை வழங்கி வந்தனர். ஆனால், நண்பகல் நேரத்திற்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு சுத்தமாக உணவில்லை என தெரியவந்ததையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் தொடர்பு கொண்ட போதும் உணவு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
அதையடுத்து அந்த ஆயிரத்து 500 தமிழ்ப் பயணிகளுக்கு பிரியாணி, கலவை சாதங்கள், பிஸ்கெட், ஆயிரத்து 500 குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. மேலும் உணவில்லாமல் தவித்தபோது உதவிய சென்னை காவல் ஆணையர், ஆனந்த்பூர் - குண்டக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆந்திர மாநில காவல் துறை தலைமை இயக்குநர், பூமிகா அறக்கட்டளைக்குத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஊரடங்கால் முடங்கிய தொழிலாளர்கள்: உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றத்தினர்