தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருங்காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அரசியல் பயணம் மாறும் - அன்புமணி ராமதாஸ் - அன்புமணி

’வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும். அதற்கேற்றார் போல் தங்கள் அரசியல் பயணமும் இருக்கும்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்தை சந்தித்த ராமதாஸ்
விஜயகாந்த்தை சந்தித்த ராமதாஸ்

By

Published : Jun 1, 2022, 4:06 PM IST

சென்னை சாலிகிராமத்திலுள்ள தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ’தமிழ்நாட்டு அரசியலில் தைரியமாக மக்களைத் திரட்டி அரசியல் செய்து வருகிறார். அதனடிப்படையில் அவரை சந்தித்ததாகவும், இது நட்பு ரீதியான ஒரு சந்திப்பு என்றும், அவர் மீது தனிப்பட்ட மரியாதை தனக்கு உள்ளதாகவும்’ தெரிவித்தார்.

மேலும், வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும். அதற்கேற்றார் போல் எங்கள் அரசியல் பயணமும் இருக்கும் என்ற அவர், தமிழ்நாட்டில் உள்ள கல்வித்தரம் மேலும் உயர வேண்டும். பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது கல்வியின் அடித்தளமே சரியாக இல்லை, நீட் தேர்வில் நம்பிக்கை இல்லாததால் தான் தற்கொலைகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், போட்டி போடுகின்ற தன்மை மாணவர்களிடம் இல்லாத சூழல் உள்ளது எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கல்வி வணிகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், தரமான கல்வியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். அதேபோல் 2026ஆம் ஆண்டு தான் தங்களுடைய இலக்கு என்று கூறிய அன்புமணி, எங்களுடைய ஆட்சி தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது, கூட்டணி ஆட்சியாகத் தான் இருக்கும் என்றார்.

மேலும், எங்கள் கொள்கையுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். அதேபோன்று, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும், 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான யுக்திகளை வகுக்கும் வகையிலும் முடிவு எடுப்போம்’ என்றார்.

இதையும் படிங்க:அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details