திமுக மூத்தத் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிகிச்சை பலனின்றி அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துவரும்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர், குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
'தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் இழப்பு வேதனைக்குரியது' - கமல் ட்வீட்
சென்னை:தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் பேராசிரியர் அன்பழகன் இழப்பு வேதனைக்குரியது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தனது ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.
anbazhagan-kamal-tweet