தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீர் குழாய் இணைப்பு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி - தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி

அம்பத்தூரில் கழிவு நீர் குழாய் அடைக்கப்பட்டதால் மனமுடைந்த வயதான தம்பதி, உறவினர் வீட்டு கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

suicide
suicide

By

Published : Oct 19, 2021, 7:56 PM IST

சென்னை: அம்பத்தூர் அடுத்த சோழபுரம் சரஸ்வதி பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன்(85). இவரது மனைவி மாரியம்மாள் (74). இவர்களது மகன் யுவராஜ் (45). இவர், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஜானகிராமனின் வீட்டுக்கு முன்பகுதியில் அவர்களின் உறவினர் சசிகலா (50) என்பவர், தனது வளர்ப்பு மகன் கிரதனுடன் (10) வசித்து வருகிறார்.

இதனிடையே ஜானகிராமன், சசிகலா ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது. சமீபத்தில் ஜானகிராமன் வீட்டுக்கு செல்லும் கழிவுநீர் குழாய் இணைப்பை சசிகலா அடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு வீட்டாருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

தற்கொலையை கைவிடுக

இந்நிலையில், இன்று (அக்.19) காலை ஜானகிராமன், மாரியம்மாள் ஆகிய இருவரும் சசிகலா வீட்டுக்கு பின்புறம் பயன்படுத்தாத கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை பார்த்த, மகன் யுவராஜ், அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்த அம்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஜானகிராமன், மாரியம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த வயதான தம்பதி

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்ஜானகி ராமன் எழுதி வைத்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், " எனது வீட்டு கழிவுநீர் இணைப்பை அடைக்கக் கூடாது எனக் கூறியும், சசிகலா அடைத்து விட்டார். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் தான் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு சசிகலா தான் காரணம். அவருக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என எழுதியுள்ளார்.

இது குறித்து ஜானகிராமனின் மகன் யுவராஜ் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சசிகலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் மனைவி மரணித்த சோகத்தில் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details