பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வர் பிரதாப் சஹியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஹி நவம்பர் 13ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி! - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
1959 ஜனவரி 1ஆம் தேதி பிறந்த சஹி, 1985இல் சட்டப்படிப்பை முடித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியைத் தொடங்கினார். உரிமையியல், அரசியல் சாசன வழக்குகளில் ஆஜராகிவந்த இவர், 2004ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் 2018ஆம் ஆண்டு நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 10 நாள்களில் 5 முக்கியத் தீர்ப்புகள்! - கோகாய் முன் காத்திருக்கும் சவால்கள்!