சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 19) திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
பொது விவாதத்தின் மீது பதிலுரை
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.
இதையடுத்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து நான்காவது நாளான இன்றும் (ஆக. 19) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பொது விவாதத்தின் மீது பதிலுரை அளித்தனர்.
நிதி ஒதுக்கீடு
அதில் பேசிய வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், “10 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவையிலுள்ள தொகையை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க 182 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வரி குறைப்பினால் நாளொன்று 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை'